செய்திகள்

மன்னார்குடி அருகே 2 வீடுகள் தீயில் எரிந்து நாசம் - ரூ.3 லட்சம் சேதம்

Published On 2017-05-31 16:47 IST   |   Update On 2017-05-31 16:47:00 IST
மன்னார்குடி அருகே இரண்டு வீடுகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தன.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய கூரை வீட்டில் நேற்று இரவு திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. தீ மளமளவென கூரையின் மேல் பரவி பெரிய தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

ஆனால் தீ விபத்தில் வீட்டில் இருந்த ஆதார் கார்டு, அடையாள அட்டை, போன்ற ஆவணங்களும் குளிர்சாதன பெட்டி உள்படி அனைத்து தளவாட பொருட்களும் எரிந்து முழுவதும் நாசமாகின. சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் வரை இருக்கும் என்று தெரிவித்தனர். தீ விபத்தால் அருகே இருந்த 5 தென்னை மரங்களும் எரிந்து நாசம் ஆகின.

இது போல் சேந்தமங்கலம் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது வீட்டிலும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து விட்டது. சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News