செய்திகள்
லால்குடி அருகே ஆம்னி வேன் கடத்தல்
லால்குடி அருகே வீட்டின் வெளியே நிறுத்திருந்த ஆம்னி வேனை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். கடத்தி சென்ற நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள நெருஞ்சக்குடி ஊராட்சி மாந்துறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது60). ஓய்வு பெற்ற பெல் அதிகாரி. இவருக்கு சொந்தமாக ஆம்னி வேன் உள்ளது. நேற்றிரவு வேனை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். இன்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனை காணவில்லை.
அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது நள்ளிரவு 3பேர் வேனை தள்ளி சென்றதாக தெரிவித்தனர். இதனால் நள்ளிரவு மர்ம நபர்கள் வேனை கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது.
இது குறித்து லால்குடி போலீஸ் நிலையத்தில் சண்முகம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வேனை கடத்தி சென்ற நபர்கள் யார், எதற்காக கடத்தி சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.