செய்திகள்

விநாயகர் சிலைகளில் ரசாயனம் சேர்க்கக்கூடாது: கலெக்டர் உத்தரவு

Published On 2017-08-19 08:37 IST   |   Update On 2017-08-19 08:37:00 IST
விநாயகர் சிலைகளில் இயற்கை வண்ணங்களையே பயன்படுத்த வேண்டும், ரசாயனம் சேர்க்கக்கூடாது என்று சென்னை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.
சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் வர உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். எனவே விநாயகர் சிலைகளை செய்யும் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் மாசு ஏற்படுத்தாத களிமண், சுடப்பட்ட மற்றும் ரசாயனம் இல்லாத கிழங்கு மாவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூல பொருட்களால் மட்டுமே விநாயகர் சிலைகளை தயார் செய்யவேண்டும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களை மட்டுமே சிலைகளில் பயன்படுத்த வேண்டும். ரசாயன வண்ணங்கள் பூசுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களை கொண்டு தயாரிக் கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News