செய்திகள்

மதுரையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

Published On 2017-08-19 15:37 IST   |   Update On 2017-08-19 15:37:00 IST
மதுரையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 8 பவுன் நகைப் பையை மற்றொரு பெண் நூதன முறையில் திருடிச் சென்றார்.

மதுரை:

மாட்டுத்தாவணியில் இருந்து ஆரப்பாளையத்திற்கு நேற்று அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் கோவை மாவட்டம், சரவணம்பட்டி சிவகக்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி முத்து லட்சுமி (வயது 33) பயணம் செய்தார்.

அவர் அருகே அமர்ந்திருந்த ஒரு பெண், தான் வைத்திருந்த காசு கீழே விழுந்து விட்டதாகவும், அதனை எடுத்து தரும்படியும் கூறினார். இதனை நம்பி முத்துலட்சுமி குனிந்து பஸ்சுக்குள் கிடந்த காசை எடுத்துக் கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட அந்த பெண், உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கி விட்டார்.

அவர் சென்ற பிறகு, தான் வைத்திருந்த நகைப்பை மாயமாகி இருப்பது கண்டு முத்துலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து திலகர் திடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. 8ம பவுன் நகைகள் அந்தப்பையில் இருந்ததாக புகாரில் முத்து லட்சுமி குறிப்பிட்டுள்ளார். ஓடும் பஸ்சில் நூதன முறையில் நகைப்பை திருடிய பெண் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News