செய்திகள்
தண்டராம்பட்டு அருகே லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. உள்பட 2 பேர் சஸ்பெண்டு
தண்டராம்பட்டு அருகே லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. மற்றும் அவரது உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ராயண்டபுரம் மற்றும் அல்லப்பனூர் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் சாவித்திரி (வயது35). கிராம உதவியாளர்கள் கோவிந்தன் (38), இந்திரா (32). இவர்கள் தங்களிடம் சான்றிதழ் கேட்டு வருபவர்களிடம் ஏராளமான பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.
கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி, சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், அரசு புறம்போக்கு நிலத்தில் பயிர் செய்தல், உள்ளிட்டவற்றுக்காக ரூ.2 லட்சம் வரை வசூலித்து ஓராண்டுக்கு மேலாகியும் அவர் எந்தச் சான்றும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இதுகுறித்து உதவி கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தண்டராம்பட்டு தாசில்தார் சஜேஷ்பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகேந்திரமணி ஆகியோருக்கு உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த 31-ந் தேதி அதிகாரிகள் ராயண்டபுரம் கிராமத்துக்கு நேரில் சென்று பொதுமக்கள் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி, உதவியாளர்கள் கோவிந்தன், இந்திரா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 100-க்கும் மேற்பட்டோரிடம் பல்வேறு சான்றிதழ்களை வழங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரியும், உதவியாளர்களும் லஞ்சம் வாங்கியது அம்பலமானது.
லஞ்சம் கொடுத்த ஒரு சிலருக்கு பொதுமக்கள் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி பணத்தை திருப்பி கொடுத்தார். மீதி பணத்தை ஒரு மாதத்திற்குள் திருப்பிக் கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.
இதனிடையே, விசாரணை அறிக்கையை உதவி கலெக்டர் உமா மகேஸ்வரியிடம், தாசில்தார் சஜேஷ்பாபு சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் கிராம உதவியாளர்கள் கோவிந்தன் பீமாரப்பட்டி கிராமத்துக்கும், அஞ்சலா மலமஞ்சனூர் கிராமத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், இவர்கள் 3 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி மற்றும் அவரது உதவியாளர் இந்திரா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.