செய்திகள்

லாலாப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2017-09-10 16:48 GMT   |   Update On 2017-09-10 16:48 GMT
லாலாப்பேட்டை அருகே ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

லாலாப்பேட்டை:

கரூர் மாவட்டம் லாலாப் பேட்டை மத்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் நிதிஷ்குமார் (வயது 14). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தான்.

நேற்று பள்ளி விடுமுறையையடுத்து லாலாப்பேட்டை காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினான். அவனை அப்பகுதி பொதுமக்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் நிதிஷ்குமார் தண்ணீரில் மூழ்கி பலியானான்.

இது குறித்த தகவல் அறிந்ததும் லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News