செய்திகள்

திருவண்ணாமலையில் மேலும் ஒரு போலி கிளீனிக் சிக்கியது

Published On 2017-10-24 15:51 GMT   |   Update On 2017-10-24 15:51 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் சோதனையில் மேலும் ஒரு போலி கிளீனிக் சிக்கியுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ள கிளீனிக்கில் இன்று காலை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது வெளிபுறத்தில் இருந்த பெயர் பலகையில் கிளீனிக் என்றும் உள்ளே சென்று பார்த்தபோது ரத்த பரிசோதனை செய்வதற்கான உபகர ணங்கள் இருப்பதை கலெக்டர் அறிந்தார்.

மேலும் அந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த கிளீனிக் நடத்தி வருபவர் போலி டாக்டராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பாண்டியனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

போலி டாக்டர் என கண்டறியப்பட்டால் கிளீனிக்கிற்கு சீல் வைக்கவும் கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். ஏற்கனவே 7 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு 12 மருத்துவமனைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது.

Similar News