செய்திகள்
திருச்சி: லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
திருச்சியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
திருச்சி:
திருச்சி தென்னூர் மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 31). இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இவரது மனைவி பிரசவத்திற்காக லால்குடி அருகே கோமாக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்தின் மனைவிக்கு குழந்தை பிறந்தது.
இந்நிலையில் இன்று காலை கோமாக்குடிக்கு சென்ற வினோத், குழந்தை மற்றும் மனைவியை பார்த்து விட்டு தென்னூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருச்சி கொள்ளிடம் புதிய பாலத்தில் வரும் போது பின்னால் வந்த சிமெண்ட் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிய வினோத், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.