செய்திகள்
காயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி.

ஆத்தூர் அருகே விபத்து- ஆட்டோ மோதி முன்னாள் எம்எல்ஏ படுகாயம்

Published On 2019-04-01 10:25 GMT   |   Update On 2019-04-01 10:25 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆட்டோ மோதிய விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கல்லாநத்தம் பகுதியில் வசித்து வருபவர் மாதேஸ்வரன். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். தற்போது அ.ம.மு.க. சேலம் கிழக்கு மாவட்ட அவை தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மாதேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் கல்லாநத்தம் அருகே உள்ள முல்லைவாடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒன்று திடீரென சாலையில் குறுக்கே புகுந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஆட்டோ மீது மோதியது. இதில் மாதேஸ்வரன் படுகாயம் அடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News