செய்திகள்
கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை- பள்ளி கார் டிரைவர் கைது

Published On 2019-12-19 10:21 GMT   |   Update On 2019-12-19 10:21 GMT
ஆவடி அருகே 7-ம் வகுப்பு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி:

ஆவடியை அடுத்த வெள்ளானூர் 4-வது தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கன்னடபாளையம் பஸ் நிலையத்தில் காத்திருந்த 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

ஆரிக்கம்பேடு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். சிறுவனின் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் செல்லதுரைக்கு தர்ம அடி கொடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஆவடி மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து செல்லதுரையை கைது செய்தனர். அவர் தனியார் பள்ளியில் கார் டிரைவராக உள்ளார்.

Similar News