அஜர்பைஜான் விமானம் ரஷியாவால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்: சந்தேகத்தை கிளப்பும் மீடியாக்கள்
- விமானம் செல்லக்கூடிய விமான நிலையம் அமைந்துள்ள இடத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
- டிரோன் போன்றவை தாக்க வந்திருக்கலாம் என ரஷியா தவறுதலாக பாதுகாப்பு சிஸ்டம் மூலம் தாக்கியிருக்கலாம் என சந்தேகம்.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பாகுவில் இருந்து ரஷியாவின் குரோஸ்னி என்ற இடத்திற்கு சென்றபோது அடர் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் திருப்பிடிவப்பட்டு கடைசியாக கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையத்துக்கு திசை மாற்றி விடப்பட்டது. அதன்படி அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் 62 பயணிகள், ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர். இதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் உயிர் பிழைத்தனர். இதில் இரண்டு சிறுமிகள் ஆவார்கள்.
விமானம் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அல்லது நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஆகிவயற்றில் ஏதாவது ஒன்று தவறுதலாக தாக்கி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உலகின் பல்வேறு மீடியாக்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.
இதற்கு முக்கிய காரணம் விமானத்தின் வாள் பகுதியில் ஏவுகணை பகுதிகளில் தாக்கியதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
உக்ரைன் தற்போது ரஷியா மீது டிரோன் தாக்கல் நடத்தி வருகிறது. கிரோஸ்னி மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் டிரோன் ஆக இருக்கலாம் என ரஷியாவின் ஏர் பாதுகாப்பு நிலையம் தகவல் தெரிவித்து அதன்மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கிரோஸ்னி விமான நிலையத்தில் தரையிறக்க விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட பிறகு சிறிது நேரத்தில் வெளியே மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக உயிரிபிழைத்தவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பத்திரிகை, நடுவானத்தில் வைத்து விமானத்தின் ஆக்சிஜன் டேங்க் வெடித்ததாக தெரிவித்துள்ளது.
விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆடியோ கேட்கப்பட்ட பின்னர்தான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும்.