கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைய முன்மொழிவு: ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டல் செய்த டிரம்ப்
- அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடாவை முன்மொழிகிறேன்
- வெயின் கிரேட்ஸ்கிவெயின் கிரேட்ஸ்கியை பிரதமராக முன்மொழிகிறேன்.யை பிரதமராக முன்மொழிகிறேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் அமெரிக்காவின் பெருமையை மீட்பதுதான் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு ஒரே வழி வரி விதிப்பதுதான்.
அண்டை நாடான கனடான அமெரிக்காவை சுரண்டுவதாக தனது கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்றதும், முதலில் கையெழுத்திடும் கோப்புகளில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதுதான் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பு கனடாவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என ஜஸ்டின் ட்ரூடோ கருதுகிறார்.
கடந்த மாதம் ஜஸ்டின் ட்ரூரோ டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை நடததினர். இது கனடாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும என தெரிவித்தார். அப்போது டொனால்டு டிரம்ப் "அமெரிக்காவிடம் இருந்து 100 பில்லியன் டாலர் அளவில் கொள்ளை அடிக்காவிடில் உங்ளுடைய நாடு உயிர்வாழ முடியாது. அப்படித்தானே? என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், மற்றொரு பதிவில் கவர்னர் என ஜஸ்டின் ட்ரூடோவை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். அத்துடன் உங்களுடைய வரி 60 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்படும். கனடா வர்த்தகம் உடனடியாக இரண்டு மடங்காகும். உலகில் உள்ள மற்ற எந்த நாடும் பெறாத ராணுவ பாதுகாப்பை பெறும்.
அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை முன்மொழிகிறேன். இதனால் வரி குறையும். வெயின் கிரேட்ஸ்கியை பிரதமராக முன்மொழிகிறேன் என ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டல் செய்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து கனடா நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். மக்கள் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
டொனால்டு டிரம்ப் தனது Truth சமூக வலைத்தளத்தில் "நான் வெய்னிடம் கனடாவின் பிரதமர் பதவிக்கு நீங்கள் ஏன் போட்டியிடக்கூடாது, விரைவில் கனடாவின் ஆளுநர் என்று அறியப்படுவீர்கள்- நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள், நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூட வேண்டியதில்லை என்றேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
வெயின் தலைசிறந்த ஐஸ் ஹாக்கி வீரர் ஆவார்.