செய்திகள்
தற்கொலை

கோபி அருகே கொடிவேரி அணை வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை

Published On 2020-03-02 15:21 IST   |   Update On 2020-03-02 15:21:00 IST
கோபி அருகே தடுப்பணை வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கோபி:

சத்தியமங்கலம் அருகே உள்ள குளத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கருப்பாத்தாள் (74). இவர் கணவரை பிரிந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த கருப்பாத்தாள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக மகளிடம் கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கருப்பதாத்தாள் கோபி அருகே உள்ள கொடிவேரிஅணை தடுப்பணை வாய்க்காலில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கடத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு விரைந்து வந்து கருப்பாத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் கருப்பாத்தாள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News