செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா - 6 பேர் பலி

Published On 2020-07-23 15:43 IST   |   Update On 2020-07-23 15:43:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 4734 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 41,467 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 4433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 7,487 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 1710 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 9 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 416 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 350 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

நேற்று மாவட்டத்தில் 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி காந்தி தெருவை சேர்ந்த 38 வயது நபர், அல்லம்பட்டியை சேர்ந்த 37 வயது நபர், 53 வயது பெண், பர்மா காலனியை சேர்ந்த 60 வயது முதியவர், ஏ.பி.சண்முகம் தெருவை சேர்ந்த 67 வயது நபர், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகாசி பி.எஸ்.கே. ரோட்டை சேர்ந்த 84 வயது முதியவர், ஆறுமுகம் நகரை சேர்ந்த 36 வயது நபர், மீனாட்சி காலனியை சேர்ந்த 65 வயது முதியவர், இந்திரா காலனியை சேர்ந்த 37 வயது நபர், சித்துராஜபுரத்தை சேர்ந்த 33 வயது நபர், வள்ளிவிநாயகர் தெருவை சேர்ந்த 38 வயது நபர், தனியார் ஓட்டலில் பணியாற்றும் 37 வயதுநபர், சாமிபுரம் காலனியை சேர்ந்த 32 வயது பெண், போலீஸ் காலனியில் வசிக்கும் 45 வயது நபர், போலீஸ் ஸ்டேஷன் ரோடு 32 வயது நபர், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 63 பேர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 43 பேர், சொக்கநாதன்புதூர், மம்சாபுரத்தை சேர்ந்த 7 பேர், சாத்தூரை சேர்ந்த 18 பேர், நள்ளிசத்திரத்தை சேர்ந்த 18 பேர், மம்சாபுரத்தை சேர்ந்த 7 பேர், திருத்தங்கலை சேர்ந்த 11 பேர் மற்றும் வெற்றிலையூரணி, பேர்நாயக்கன்பட்டி உள்பட பல பகுதிகளை சேர்ந்த 301 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,734 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரேனாவுக்கு 6 பேர் இறந்தனர். ராஜபாளையம் சத்திரபட்டியை சேர்ந்த 63 வயது நபர், திருத்தங்கலை சேர்ந்த 57, 60 வயது நபர்கள், அருப்புக்கோட்டையை சேர்ந்த 72 வயது நபர், ராஜபாளையத்தை சேர்ந்த 53 வயது நபர், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 63 வயது நபர் என 6 பேர் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவ பரிசோதனைகளை தினசரி 2000 அளவுக்கு மாவட்ட நிர்வாகம் அதிகரித்துள்ள நிலையில் முடிவுகள் தெரிய வேண்டிய எண்ணிக்கையும் 7 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தலில் உள்ள பிரச்சினை காரணமாகவும், முடிவுகள் தெரிவதில் தாமதம் ஏற்படுவதாலும் நோய் பரவல் அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில் இந்த 2 பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News