தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
- வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.
- அதிமுக அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய ரூ.100.92 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் வைத்திலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு அதிமுக அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது தனியார் நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.