தமிழ்நாடு

காணும் பொங்கல் கொண்டாட்டம்- சென்னையில் நாளை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published On 2025-01-15 21:30 IST   |   Update On 2025-01-15 21:30:00 IST
  • பொங்கலை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.
  • நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

பொங்கலை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல இருக்கின்றனர்.

இதனால், பொது மக்களின் வசதிக்காக காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News