தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு: 14 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்த பார்த்திபனுக்கு கார் பரிசு

Published On 2025-01-15 18:20 IST   |   Update On 2025-01-15 18:34:00 IST
  • பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கி மஞ்சம்பட்டி துளசி 2 ஆம் இடம் பிடித்தார்.
  • பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபா என்ற மாடுபிடி வீரர் 11 மாடுகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்தார்.

பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1,100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர்.

இதில் வி.கே. சசிகலா காளைக்கு சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை தொடங்கி நடந்துவந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 10 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 930 காளைகள் களம் கண்டன

நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கி மஞ்சம்பட்டி துளசி 2 ஆம் இடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 11 மாடுகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்த பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபா என்ற மாடுபிடி வீரருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை சத்திரபட்டி விஜயாதங்கபாண்டி என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான இரண்டாவது பரிசு சின்னப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பசு, கன்று பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான மூன்றாவது பரிசு குருவித்துறையை சேர்ந்த பவித்ரன் என்பவருக்கு விவசாய கருவி பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News