செய்திகள்
உயர்நீதிமன்றம்

பரோல் விதிகள் மீது சட்டத்திருத்தம் கொண்டுவர உத்தரவு

Published On 2020-07-23 21:34 IST   |   Update On 2020-07-23 21:34:00 IST
பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சேலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் பரோல் மனு குறித்த விசாரணையின் போது நீதிபதிகள், பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மேலும் சட்டத்திருத்தம் கொண்டு வரும்வரை 2 வார காலக்கெடுவை கண்டிப்புடன் பின்பற்றவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கத் தவறினால் கைதிகளின் சட்டப்போராட்ட செலவை அதிகாரிகள் ஏற்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பரோலில் வெளிவரும் கைதிகளிடம் பாதுகாப்புக்கு செல்லும் போலீசார் பணம் பெறுவது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் துறைரீதியான நடவடிக்கை மட்டுமின்றி ஊழல்தடுப்புச் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என நீதிபதி தெரிவித்தனர்.

பரோல் வெளிவரும் கைதிகளிடம் போலீசார் பணம் பெறக்கூடாது என்பதை உறுதி செய்ய சிறைத்துறை டிஐஜிக்கும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். 

Similar News