செய்திகள்
மிளகு

பெரும்பாறை பகுதியில் மிளகு சீசன் தொடக்கம்

Published On 2021-03-20 11:17 GMT   |   Update On 2021-03-20 11:18 GMT
மிளகு விளைச்சல் குறைந்திருப்பதால் விலை உயர வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
பெரும்பாறை:

பெரும்பாறை பகுதியில் தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, புல்லாவெளி, குப்பம்மாள்பட்டி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரியூர், பாச்சலூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் மிளகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு மிளகு அறுவடை சீசன் தொடங்கியுள்ளது.

அதேநேரத்தில் இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக மிளகு விளைச்சல் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ கருப்பு மிளகு ரூ.390 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பச்சை மிளகு காம்புடன் ரூ.100-க்கு விற்பனையாகிறது.

அறுவடை செய்யப்படுகிற மிளகு தரம் பிரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. அவற்றை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். விளைச்சல் குறைந்திருப்பதால் விலை உயர வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Similar News