செய்திகள்
கெபிராஜ்

ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பெண் புகார்

Published On 2021-06-22 13:01 IST   |   Update On 2021-06-22 13:01:00 IST
கெபிராஜ் மீது புகார் அளித்துள்ள பெண் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் வீடியோ பதிவின் மூலம் வாக்குமூலம் பெற சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை:

சென்னை அண்ணா நகரில் ஜூடோ பயிற்சி மையம் நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பயிற்சிக்கு வந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து கடந்த மாதம் 30-ந்தேதி கெபிராஜை போலீசார் கைது செய்தனர். அவர் பயிற்சி மற்றும் போட்டிக்கு அழைத்து செல்லும்போது மேலும் பல மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்து இருந்தனர்.


இந்த நிலையில் கெபிராஜ் மீது அவரிடம் பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கெபிராஜ் மீது புகார் அளித்துள்ள பெண் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் வீடியோ பதிவின் மூலம் வாக்குமூலம் பெற சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் புகார் கொடுத்த மற்ற பெண்களிடமும் விசாரணை நடத்தி கெபிராஜ் மீது மேலும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்

Similar News