செய்திகள்
கொள்ளை

திருவேங்கடத்தில் பூட்டிய வீட்டில் பணம் கொள்ளை

Published On 2021-06-29 15:12 IST   |   Update On 2021-06-29 15:12:00 IST
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் பூட்டிய வீட்டில் இருந்து ரூ.1 3/4 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருவேங்கடத்தில் கிரசர் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவரது சொந்த ஊரான திருமங்கலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். இதற்காக திருவேங்கடத்தில் உள்ள தனது வீட்டை பூட்டி சென்றுள்ளார்.
 
இந்நிலையில் இன்று காலை தொழிற்சாலையின் ஊழியர் வீட்டை சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவை திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.1 3/4 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

மற்றொரு இடத்தில் நகைகள் இருந்ததால் கொள்ளையர்களால் நகையை கொள்ளையடிக்க முடியவில்லை. இதனால் நகைகள் தப்பியது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Similar News