செய்திகள்
சிறந்த சத்துணவு காய்கறி தோட்டங்களுக்கு பரிசு
பள்ளிகளில் அமைத்த சத்துணவு காய்கறி தோட்டத்தில் சிறப்பான தோட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.
திருப்பூர்:
சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம் தலா ரூ. 5,000 மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 151 மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அமைக்கப்பட்ட காய்கறி தோட்டத்தில் சிறந்த காய்கறித் தோட்டம் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
அதன்படி ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முதல் பரிசும், அவிநாசி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டாம் பரிசும், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பள்ளிக்கு மூன்றாம் பரிசும் கிடைத்துள்ளது.
பள்ளிகளை பாராட்டிய கலெக்டர் வினீத், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் உடனிருந்தார்.