உள்ளூர் செய்திகள்
கிருமி நாசினி தெளிப்பு

ஊழியர்களுக்கு கொரோனா- கிணத்துக்கடவில் தனியார் நிறுவனம் மூடல்

Published On 2022-01-20 14:59 IST   |   Update On 2022-01-20 14:59:00 IST
கிணத்துக்கடவில் ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் தொடங்கிய கொரோனா பரவல் தற்போது 2 இலக்கத்தை தொட்டுவிட்டது. 

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தினசரி 400&-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த நிலையில் உள்ளது. 

நேற்று நெம்பர் 10.முத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அதேபோல் கோவை-&-பொள்ளாச்சி மெயின்ரோட்டில் சினிமா தியேட்டர் அருகில் உள்ள வங்கியில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்ட தனியார் நிறுவனம், வங்கிகளுக்கு  நல்லட்டிபாளையம் வட்டாரமருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையிளான மருத்துவ குழுவினர் பார்வையிட்டு சுகாதார மேற்பார்வையாளர் குணசேகரன் கண்காணிப்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. 

இதனையடுத்து வங்கியை 3 நாட்கள் மூட சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர். அதேபோல் சங்கராயபுரத்தில் செயல்பட்ட தனியார் தொழிற்சாலையை ஒருவாரம் மூடி கிருமிநாசினி மருந்து தெளிக்க அறிவுரை வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா பாதிப்பு 56 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா கூறியதாவது:- கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைவரும் முதல் மற்றும் 2&வது தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்வது அவசியம். அனைவரும் அவசியம் முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Similar News