உள்ளூர் செய்திகள்
முகாமில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தைக்கு போலியோ சொட்டு வழங்கினார்.

நாகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Published On 2022-02-27 09:23 GMT   |   Update On 2022-02-27 09:23 GMT
நாகை மாவட்டத்தில் 445 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் 60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து 
445 மையங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தை சார்ந்த 60 ஆயிரத்து 
853 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது 

அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார 
நிலையமும், வேளாங்கண்ணி பேரூராட்சி இணைந்து வேளாங்கண்ணியில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள், 
மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் போலியோ 
சொட்டு மருந்து வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். 

இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வேளாங்கண்ணி பேராலயம், பேருந்து நிலையம், மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது

முகாமில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மற்றும் ஆத்மா தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், ஆத்மா உறுப்பினர் மரிய சார்லி, மருத்துவர் விக்னேஸ்வர், சுகாதார ஆய்வாளர் மோகன், பேரூராட்சி அலுவலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News