உள்ளூர் செய்திகள்
வேளாண் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள்

அசோலா வளர்ப்பு குறித்து வேளாண் கல்லூரி பேராசிரியர் விளக்கம்

Published On 2022-02-27 09:52 GMT   |   Update On 2022-02-27 09:52 GMT
அசோலா வளர்ப்பு குறித்து வேளாண் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகளுக்கு விளக்கினர்.
தஞ்சாவூர்:

அம்மாபேட்டை வட்டாரம் பூண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அசோலா வளர்ப்பு குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பூண்டி ஊராட்சி மன்ற தலைவர், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியின் வேளாண் நுண்ணுயிரியல் உதவி பேராசிரியர் டாக்டர் உமா மகேஸ்வரி அவர்கள்  அசோலா வளர்ப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

அசோலா  நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது என கூறினார்.அசோலா படுக்கை அமைக்கும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். விவசாயிகள் தங்களின் சந்தேகங்களை பேராசிரியரிடம் கேட்டறிந்தன.

Similar News