உள்ளூர் செய்திகள்
வரி செலுத்தாத குடிநீர்-மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை- நெல்லை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
வருகிற 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலும் மாநகராட்சி கணனி வரி வசூல் மையங்கள் அனைத்தும் செயல்படும் என நெல்லை மாநகராட்சி கமிஷனர் கூறி உள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-2022-ஆம் ஆண்டிற்கான வரிவசூல் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில் உள்ளது.
எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் தொழில்வரி, அச்சம் மற்றும் பல்வேறு இனங்களுக்கான உரிமக் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மற்றும் மாநகராட்சி கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த கேட்டுக்கொள்ளப் படுகின்றது.
மேலும் சொத்துவரி மற்றும் இதர வரியினங்களில் நெடுங் காலமாக வரி செலுத்தாமல் உள்ள வரிவிதிப்புதாரர்களின் குடிநீர் இணைப்பு மற்றும் மின்இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்த்திட கேட்டுக் கொள்ளப் படுகிறது.
மேலும் பொதுமக்கள் வரிகளை சிரமம் இன்றி செலுத்துவதற்கு ஏதுவாக வருகிற மார்ச் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் மாநகராட்சி கணனி வரி வசூல் மையங்கள் அனைத்தும் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.