உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
மதுரை
மதுரை மேலபனங்காடியை சேர்ந்த குமார் மனைவி மகேஸ்வரி. இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
மகேஸ்வரி கூறுகையில், “என் கணவர் மீது திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தை போலீசார் அடிக்கடி பொய் வழக்கு போட்டு துன்புறுத்தி வருகின்றனர்.
அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவரை விடுவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன்” என்றார். தல்லாகுளம் போலீசார் மகேஸ்வரியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.