உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் உலக சுகாதார தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவிலில் உலக சுகாதார தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாகர்கோவில்:
உலக சுகாதார தினத்தை யொட்டி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
பேரணியை கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேரணியில் பங்கேற்றவர்களுடன் சிறிது தூரம் நடந்து வந்தார். பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் செவிலியர்கள் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கிய பேரணியானது ராணி தோட்டம் டெரிக் சந்திப்புவழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.
மருத்துவ கல்லூரி முதல்வர் திருவா-சகமணி கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ் டாக்டர்கள் லியோடேவிட், ஆறுமுக வேலன், விஜயலட்சுமி மோகன்தாஸ்,ரெனிமோள், சுரேஷ் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக வந்தனர்.
முன்னதாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூ-ரியில் நடந்த நிகழ்ச்சியில் கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கலெக்டர் ஏற்படுத்தினார். பின்னர் பிளாஸ்டிக்கை ஒழிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து பொது மக்களுக்கு துணிப்பைகளை கலெக்டர் அரவிந்த் வழங்-கினார். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் அரவிந்த் நட்டார்.