உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

எம்.ஜி.ஆர். நகரில் பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த பள்ளி மாணவர்கள்

Published On 2022-04-29 09:29 GMT   |   Update On 2022-04-29 09:29 GMT
பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பள்ளி மாணவர்கள் சிலர் திடீரென பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது சரமாரியாக கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போரூர்:

அடையாறில் இருந்து வடபழனி நோக்கி மாநகர பஸ் (எண் 5இ) வந்து கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் பஸ் வந்தபோது அங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பள்ளி மாணவர்கள் சிலர் திடீரென பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது சரமாரியாக கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து தப்பி ஓடிய மாணவர்களை தேடி வருகின்றனர்.

Similar News