குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி- கீழ்பாக்கத்தில் சோகம்
- ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
- 4 வருடங்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை கீழ்பாக்கம் பகுதியில் திவ்யா- ராம்குமார் தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். திவ்யா- ராம்குமார் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். திவ்யா தனது தாய் வீடான கீழ்பாக்கத்திலும் ராம்குமார் பெருங்களத்தூரிலும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திவ்யா, தனது இரு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து விட்டு தானும் கத்தியால் தன்னை தானே குத்தியுள்ளார்.இதில் ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயத்துடன் இருந்த 5 வயது சிறுவனுக்கும் தாய் திவ்யாவுக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திவ்யா கணவனை பிரிந்து வாழ்வதாகவும், மன அழுத்ததால் வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.