உரக்கப் பேசியிருக்கிறோம்.. தமிழ்நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிர்ப்பு, நிதிக்கோரிக்கை என உரக்கப் பேசியிருக்கிறோம்.
- நாடாளுமுன்றத்தில் பேசிய எம்பிக்களை எண்ணி கழகத் தலைவராகப் பெருமை கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசியிருக்கிறோம், மத்திய அரசு மவுனம் கலைத்து தமிழ்நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
உங்கள் எம்.பி.களால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டவர்களை வாயடைக்கச் செய்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
அரசியலமைப்பின் 75-ஆவது ஆண்டை முன்னிட்ட விவாதத்தில் ஆழ்ந்த கருத்துகள் - மாநில உரிமை - மணிப்பூர் வன்முறை - சிறுபான்மை நலன் - ஜனநாயகத்துக்கு எதிரான #ONOE மற்றும் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிர்ப்பு, நிதிக்கோரிக்கை என உரக்கப் பேசியிருக்கிறோம்!
கழகத் தலைவராகப் பெருமை கொள்கிறேன்.
ஒன்றிய அரசு மவுனம் கலைத்து தமிழ்நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.