உலக அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு விளக்கத்தை கேட்டதில்லை.. இபிஎஸ் மீது உதயநிதி தாக்கு
- அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
- ஆனால் அதிமுகவிடம் இருந்து அது பற்றி பேச்சு மூச்சு கிடையாது.
எதிர்க்கட்சிகளுக்கு அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கிறது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும் என்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவிடம் இருந்து அது பற்றி பேச்சு மூச்சு கிடையாது என சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவிடம் இருந்து அது பற்றி பேச்சு மூச்சு கிடையாது. இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால், ஜெயக்குமார் நிலைபாடே தன்னுடைய நிலைபாடு என கூறினார். இப்படிப்பட்ட எதிர்கட்சி தலைவரை எங்கேயாவது பார்த்ததுண்டா. உலக அரசியல் வரலாற்றிலேயே இந்த மாதிரி ஒரு விளக்கத்தை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்.
சரி ஜெயக்குமார் என்ன கூறியுள்ளார் என்று பார்த்தால், அவர் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது பாஜக-வுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். பாஜகவுக்கு நிச்சயம் பின்விளைவு ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்பவோ தெரியும். அது அவர் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பது இல்லை.
சமீபத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்றிய பாஜகவை எதிர்த்தோ, கண்டித்தோ ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை.
என்று உதயநிதி கூறினார்.