உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே 10 லிட்டர் சாராயம் பறிமுதல்
சங்கராபுரம் அருகே 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே ஊரைச்சேர்ந்த ரமேஷ் (42) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து போலீசார் அங்கிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற ரமேஷை தேடி வருகின்றனர்.