கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது : போலீசார் அதிரடி நடவடிக்கை
- குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- ௩ பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.