சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு அறிகுறியுடன் 3 பேருக்கு சிகிச்சை
- டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
- சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது,
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலை பகுதியை சேர்ந்த 20 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் சென்னையி லிருந்து வருகை புரிந்தார். தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் இருந்ததால் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது டெங்கு அறிகுறிப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அரசு மருத்துவ மனை டெங்கு சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் பெங்களூரில் இருந்து வருகை புரிந்தவருக்கும், சீர்காழி சேர்ந்த மற்றொருவருக்கும் டெங்கு பாதிப்பு இருந்தததை அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீர்காழி அரசு மருத்துவம னையில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்க ப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு அடுத்து சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தேவையில்லாத தூக்கி எறியப்பட்ட டயர்கள் தேங்காய் ஓடுகள் , பழைய பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தே ங்காதவாறு கண்காணித்து அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறு த்தியுள்ளது.