உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 35 யானைகள் கர்நாடகாவுக்கு விரட்டியடிப்பு
- கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன.
- காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 35 க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கடந்த சில நாட்களுக்கு முன் ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
இந்த யானைகளை கர்நாடகாவுக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 க்கு மேற்பட்ட காட்டு யானைகள் தனியாக முகாமிட்டு விவசாய பயிர்களின் நாசம் செய்து வருகின்றன.
அதேபோல் ஜவளகிரி வனப்பகுதியிலும் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.