பாவூர்சத்திரம் அருகே பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை குடோனில் திடீர் தீ
- தீயில் எரிந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியது.
- தீ விபத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி சாலை பகுதியில் பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலையில் ராஜன் குடோனை அடைத்து விட்டு வெளியில் சென்று இருந்த நேரத்தில் திடீரென குடோனில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது.
தொடர்ந்து குடோனின் உள்பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியது.
இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர். சம்பவட இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயில் கருகி கிடந்த வாகனங்களை தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அனைத்தனர். தீ விபத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது தெரியவந்தது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.