உள்ளூர் செய்திகள்
டவுன் மார்க்கெட்டில் இரும்பு கொக்கியால் டிரைவரை தாக்கிய தொழிலாளி
- பாரதி ஓட்டிச் சென்ற லோடு வேன் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.
- பாரதியை மூட்டை தூக்கும் கொக்கியால் வீரமணி தாக்கினார்.
நெல்லை:
ஆலங்குளம் பட்டேல் தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் பாரதி(வயது 26). இவர் லோடு வாகன டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கு லோடு ஏற்றி வந்தார்.
மார்க்கெட்டின் உள் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது எதிரே லோடு மேனாக வேலை பார்த்து வந்த சந்திப்பு குறுக்குத்துறையை சேர்ந்த வீரமணி என்பவர் வந்துள்ளார். அவர் மீது பாரதி ஓட்டிச் சென்ற லோடு வேன் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி கையில் வைத்திருந்த மூட்டை தூக்கும் கொக்கியால் பாரதியை தாக்கினார். இதில் காயம் அடைந்த பாரதி தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.