உள்ளூர் செய்திகள்
அம்பை காசிநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா
- பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் வீரபாகு சேனைத்தலைவர் இளைஞர் அணி சார்பில் 3-ம் திருநாள் மண்டகப்படி நடைபெற்றது.
இதைமுன்னிட்டு அம்பை நகராட்சி கலையரங்கம் அருகே மாணவ- மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது. ஏற்பாடுகளை இளைஞரணி தலைவர் துரை, செயலாளர் செல்வராஜ், துனைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் ரவி மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.