தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை
- வீட்டின் வெளியே படுத்திருந்த பாக்கியத்தின் தலையில் குழவிக்கல்லை போட்டார்.
- மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) கூலி தொழிலாளி.
இவரது மனைவி மாலதி (25).
இவர்கள் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.
இதனால் மாலதி கணவ ரிடம் கோ பித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை பாக்கியம் (65) என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பிரபாகரன் தனது மனைவியை கூப்பிட மாமனார் வீட்டிற்கு வந்தார்.
அப்போது மாலதிக்கும், பிரபாகரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் பாக்கியம் அவர்கள் இடையே சமாதனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாலதி கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் பிரபாகரன் தனியாக வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் பிரபாகரன் தனது மாமனார் வீட்டிற்கு வந்தார்.
அங்கு வீட்டின் வெளியே படுத்தி ருந்த பாக்கியத்தின் தலையில் குழவி கல்லை போட்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனை கைது செய்தார்.
மேலும் பாக்கியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.