உள்ளூர் செய்திகள்
பள்ளி கட்டிடங்கள் உறுதி தன்மையுடன் உள்ளதா? நகர்மன்ற தலைவர் ஆய்வு
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்ய வேண்டுமா? என விவாதித்தனர்.
- கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தொடக்கப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி கட்டடங்கள், சமையல் கூடம் கட்டடம் ஆகியவற்றினை நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பருவமழை தொடங்க வுள்ளதால் கட்டடங்களில் உறுதித்தன்மை எவ்வாறு உள்ளது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்ய வேண்டுமா ? என்பது குறித்து விவாதித்தனர். தொடர்ந்து சீர்காழி பழையபேருந்து நிலையம் பகுதியில் ரூ.4 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், போக்குவரத்திற்கு ஏதுவாக பணிகளை தரமாக விரைந்து முடித்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.