உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் தகராறு செய்தவர் கைது
- விற்பனையாளரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.
- விற்பனையாளா் பாலதண்டயுதம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் அரசு மதுபான கடை உள்ளது.
அதில் பாலதண்டயுதம் (வயது 50) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளி அன்று கடினவயல் நடுக்காட்டைச் சேர்ந்த கோபால் (45) என்பவா் டாஸ்மாக் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.
இது குறித்து விற்பனை யாளா் பாலதண்டயுதம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.