உள்ளூர் செய்திகள்
சுடுகாட்டுக்கு பாதையில்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம்
- 1 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டது.
- பயிர்களை சேதப்படுத்தி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் தாலுக்கா கண்டியூர் ஊராட்சியில் அமைந்துள்ளது நரசிங்கமங்க–ளம் கிராமம்.இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்துக்காக 1 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை.
இதனால் யாரேனும் இறந்து போனால் அவர்களை வயல், வரப்புகளில் இறங்கி சுமந்து கொண்டு செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலையில் இருப்பதாகவும் வயல்களில் விவசாயம் செய்த பிறகு அதை மிதித்து பயிர்களை சேதப்படுத்தி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.எனவே உடனடியாக சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.