உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெரிய குரும்பட்டி, மாதுப்பட்டி கிராமத்தில் பால விநாயகர், காளியம்மன், மாயபெருமாள், மகாலட்சுமி, துவார சக்தி ஆகிய தெய்வங்களின் நூதன ஆலய பிம்ப அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 

பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-01-25 15:10 IST   |   Update On 2023-01-25 15:10:00 IST
  • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
  • வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பெரிய குரும்பட்டி, மாதுப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பால விநாயகர், காளியம்மன், மாயபெருமாள், மகாலட்சுமி, துவார சக்தி ஆகிய தெய்வங்களின் நூதன ஆலய பிம்ப அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

இதற்கு முன்னதாக காளியம்மன் திருக்கோவிலில் காளியம்மன், மாயப் பெருமாள், பால விநாயகர் ஆகிய சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு பம்பை தாரை தப்பட்டை கேரளா சிறப்பு செண்ட மேளம் முழங்க, வாண வேடிக்கையுடன் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து பெரிய குறும்பட்டி மாதுப்பட்டி வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் முளைப்பாரி உடன் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

இக்கோயிலில் வரும் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த 23-ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கிய இவ்விழாவில் நேற்று 24-ம் தேதி புதிய சிலைகள் கரிக்கோலம் வருதலும், தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. பின் புதிய சுவாமிகள் ஊர்வலமும் நடந்தது. இன்று 25-ம் தேதி முதல் கால யாகபூஜையும், பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடக்கிறது. நாளை 2-ம் காலயாகபூஜையும், துவார பூஜையும், சிலைகளுக்கு கண்திறப்பு வைபவமும் மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகபூஜையும் நடக்கிறது. 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 4-ம் கால யாகபூஜையும், கலச புறப்பாடும், கோபுரம் மற்றும் மூலவருக்கு மஹா கும்பாபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. அதை தொடர்ந்து காலை 9 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 28-ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News