நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் செல்போன் பறிப்பு
- நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளியிடம் செல்போன் பறித்து சென்றனர்.
- நள்ளிரவு அவர் பிரசவ பகுதிகளுக்கு சென்று பெண்க ளிடம் அடாவடியிலும் தகாத வார்த்தைகளும் பேசியதுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
திருச்சி மாவட்டம் ஏளூர்பட்டியை அடுத்த கவரப்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் கடந்த2-ந்தேதி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரது உறவினர் திருமுருகன் நாமக்கல் பகுதிகளில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
வீரம்மாளை பார்ப்ப–தற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த திருமுருகன் மருத்துவமனை குள்ளேயே போதை தலைக்கு ஏறும் அளவிற்கு மது குடித்துளார். பின்பு பெண்கள் வார்டு பகுதிகளில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துடன் கழிவறைகளையும் எட்டிப் பார்த்து உள்ளார்.
இதை கண்ட மருத்துவமனை காவலா–ளிகள் கண்டித்த போது அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு அவர் பிரசவ பகுதிகளுக்கு சென்று பெண்க ளிடம் அடாவடியிலும் தகாத வார்த்தைகளும் பேசியதுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் திருமுருகனை மருத்துவமனை காவலாளி களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் திருமுருகனை எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.