சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
ராசிபுரத்தில் பட்டப் பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியில் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பட்ட பகலில் பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4-வது வார்டு எல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவரது மனைவி வளர்மதி (வயது 54). இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று பகல் நேரத்தில் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வளர்மதியிடம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியை கேட்டு சென்றார். பின்னர் அந்த நபர் மீண்டும் திரும்பி வந்தார். அப்போது வளர்மதி செல்போன் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த நபர், வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ராசி புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்ட பகலில் பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.