உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரியில் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

முதன்முதலாக மின்சார இயக்கத்தில் புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ஆறுமுகநேரியில் உற்சாக வரவேற்பு

Published On 2023-04-02 09:07 GMT   |   Update On 2023-04-02 09:07 GMT
  • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை முதன்முதலாக மின்சார ரெயிலாக இயங்கியது.
  • நிகழ்ச்சியின் போது ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி:

நெல்லை-திருச்செந்தூர் இடை யிலான ரெயில் பாதை மின்சார பாதையாக மாற்றப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை முதன்முதலாக மின்சார ரெயிலாக இயங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த ரெயிலுக்கு ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

இனிப்பு வழங்கி

ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது ரெயில் நிலைய அதிகாரி பொன் பலவேசம், ரெயில் என்ஜின் பைலட்டுகள் ஆகியோர் பொன்னாடை மூர்த்தி கவுரவிக்கப்பட்டனர். ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் முருகன், நிர்வாகிகள் சுகுமார், சுந்தர்ராஜ், கற்பக விநாயகம், அரிமா சங்க நிர்வாகிகள் நடராஜன், சீனிவாசன், டி.சி.டபிள்யு. நிறுவன காண்ட்ராக்டர்கள் சிவக்குமார், வெற்றிவேல் மற்றும் லிங்க பாண்டியன், சின்னதுரை, கந்தபழம், செல்வம், ஸ்ரீதர், பாரத், கருப்பசாமி, சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News