உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-06-05 01:26 GMT   |   Update On 2022-06-05 01:26 GMT
  • காரையூரில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
  • கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி சென்னையில் இருந்து புறப்பட்டு 7-ந் தேதி மதுரை செல்லும் அவர், இரவில் மதுரையில் தங்குகிறார்.

மறுநாள் காலை மதுரையில் இருந்து புறப்பட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்துக்கு முதலமைச்சர் செல்கிறார். அங்கு 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரையூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும், முதலமைச்சர், திட்டங்களை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு, மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.

Tags:    

Similar News