உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

சிவகிரி அருகே கிருஷ்ணன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

Published On 2023-05-06 14:45 IST   |   Update On 2023-05-06 14:45:00 IST
  • விழா கோவில் முன்பு கால்கோள் விழாவுடன், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • நேற்று காலை, மாலை நேரங்களில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணம் கிருஷ்ணன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கோவில் முன்பு கால்கோள் விழாவுடன், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் கோவில் பூசாரி சிவபெருமாள் கையில் தீப்பந்தம், சாட்டை, மூங்கில் பிரம்பு, ஆணி பதாதைகள் இவற்றுடன் கிருஷ்ணன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களோடு ஊர்வலத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று தட்டாங்குளம் காளியம்மன் கோவிலை வந்தடைந்தது.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி போல் இங்குள்ள தட்டாங்குளத்தில் கோவில் பூசாரி தாதர் சிவபெருமாள் இறங்கி புனித நீராடினார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர். புனிதநீர் நீராடி விட்டு ஆண்டு பலன்கள், பக்தர்களுக்கு பலன்களை கூறினார். பின்னர் காளியம்மனை தரிசித்து விட்டு நகரில் உள்ள அனைத்து கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து கோவிலை வந்தடைந்தார். வீதிகளில் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பூசாரி சிவபெருமாள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News