உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிய போது எடுத்த படம்.

சோழசிராமணி அரசு பள்ளியில் கிரிக்கெட் போட்டி

Published On 2023-01-02 12:56 IST   |   Update On 2023-01-02 12:56:00 IST
  • சோழசிராமணியில் சோலை ஈகிள் கிரிக்கெட் கிளப்பின் 35-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சோழசிராமணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணியில் சோலை ஈகிள் கிரிக்கெட் கிளப்பின் 35-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சோழசிராமணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதியில் போட்டியில் பரமத்தி ராஜா கிரிக்கெட் கிளப் அணி முதல் பரிசு தொகையான ரூ.30,035-ம், சேலம் சகாரா கிளப் கிரிக்கெட் அணி 2-வது பரிசாக ரூ.25,035-ம், கபிலர்மலை ஆர்.எம்.சி.சி கிரிக்கெட் அணி 3-வது பரிசாக ரூ.25,035-ம், பிலிக்கல் பாளையம் டைரோ கிரிக்கெட் அணி 4-வது பரிசாக ரு.15,035-ம் பெற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் ஊராட்சித் தலைவரும், மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை அமைப்பாளருமான தளபதி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கிரிக்கெட் கிளப் செயலாளர் பரத் வரவேற்றார். கலை சுந்தரராஜன் கிரிக்கெட் கிளப் மேலாளர் நாட்ராயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு தலைவர் ஜே.பி.ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், சமூக அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News